Friday, April 27, 2007

என்ன பண்ண போறேன்?

என்னடா இது கதை எழுதுற மாதிரி எழுதிகிட்டு இருக்கானே? ப்ளாக்-கோட தலைப்ப பார்த்தா 'சாப்பாட்டுராமன்'-னு இருக்கே? அப்படின்னு யோசிக்கிறீயளா?

சாப்பாட பத்திதானுங்கோ எழுதப் போறேன். பேச்சிலரா இருந்துக்கிட்டு, ரெசிப்பீக்கு அலைஞ்சு, திரிஞ்சது ஞாபகத்தில இருக்கிறச்ச, அதக் கொஞ்சம் தொட்டுப் போலாம்னுதான் கொஞ்சம் அதப் பத்தி பேசினேன்.

இனிமே ரெசிப்பிக்கு தாவிட வேண்டியதுதான்.

எல்லா ரெசிப்பியும் சொந்தமானது இல்ல, இங்கே அங்கே கேட்டது, கற்றது, சுட்டதுதான்..

யாம் பெற்ற சுவை இவ்வையகம் பெறட்டும் அப்படிங்கிற நல்லெண்ணெய்ல....ச்சீ...சீ... நல்லெண்ணத்துல இங்கே சில பரிமாறல்கள் தொடரும்னு சொல்லிக்கிறேன்..

அதுமட்டுமல்ல, நம்ம தோஸ்த்துங்க எல்லாம், நல்லா சமைக்கிறீங்களே, ஒரு நா சமைச்சுட்டு கூப்பிடேன் , வாரோம்..அப்படின்னு அன்புத் தொந்தரவு ( :))) தாங்க முடியலை.

அதுல இருந்து விடுபட, இந்த ப்ளாக்-ல நாம கேட்ட,கற்ற, சுட்ட ரெசிப்பிக்களை போட்டு, லிங்க்- கொடுத்து, வேணுங்கிறப்ப பாத்து பண்ணிக்கோங்கடான்னு சொல்லிரலாம் பாருங்க..

அதுக்குத்தான் இது... நீங்க கூட ரெசிப்பி அனுப்பலாம்..

செய்ஞ்சு பாத்துட்டு, கருத்தோட உங்க பெயர் விளங்கச் செய்வேனுங்கோவ்!

Be Ready! (இப்படி சொன்னா, நம்ம பாசக்கார பயலுவ.. பீர் அடிக்கச் சொல்றாருன்னுட்டு பாட்டில ஓப்பன் பண்ணப் போயிடுவானுங்க, நான் சொன்னது அந்த அர்த்ததில இல்லைங்கண்ணு, தயாரா இருங்கன்னு சொல்லுக்கினு, இப்ப ஜகா வாங்கிக்கிறேன்.

7 comments:

')) said...

/* பந்தியில சாப்பிட்டவங்க[counter] */

:-))

வாருங்கள். சமையல் குறிப்புகளோடு மட்டும் நில்லாமல், பல தரப்பட்ட விசயங்களையும் எழுதுங்கள்.

மிக்க நன்றி.

')) said...

நன்றி, வெற்றி.

கண்டிப்பா எழுதறேன்..

')) said...

வறுத்த கோழி மிளகு போட்டு வச்சிறுகேனே.. பாக்கலையா?
கடோத்கஜன்?

')) said...

ரொம்ப பிஸியா கடோத்கஜன்?
உங்களை எட்டு போட அழைத்திருக்கிறேனே!?
போடுங்கள். பதிலுக்கு நான் பேச்சிலர்
ரெசிப்பிஸ் தருகிறேன்.ஒகேவா?

')) said...

சாப்பாட்டண்ணே,

உங்கள் வரவு நல்வரவாகுக! வாழ்த்து லேட்டா சொல்லறேன்னு ஆறுன சோத்தை போட்டுறாதீக! :)

')) said...

வாத்தியாருக்கே பழச போடமுடியுங்களா? சூப்பரா போட்டிரலாம், தல.

நன்றிங்க,

')) said...

சமையல் குறிப்பு 1.

தேவையானவை:

அரிசி மாவு : 250க்ம்

வெங்காயத் தாள் : 2 கட்டு

ப.மிளகாய், உப்பு = சுவைக்கேற்ப

செய்முறை:
வெங்காயத் தாளை சுத்தம் செய்து பொடியாக அரிந்து கொண்டு மேற்சொன்ன அத்தனையையும் கலந்து சிறிது தண்ணிர் விட்டு பிசைந்து, வாணலியில் தட்டி முடி சிருந்தணலில் ரொட்டி போல் சுட்டால் தொட்டுக் கொள்ள கூட ஏதும் வேண்டாம்