Tuesday, April 24, 2007

அட சாப்பாட்டு ராமா?

பேச்சிலரா இருந்து, சாப்பாட்டுக்கு கஷ்டப்படுற அனுபவம் இருக்கே.. அது ஒரு ஜாலியான சோகம்ங்க. சும்மாச் சும்மா ஓட்டலுக்குப் போயி, என்னத்தச் சாப்பிடன்னு யோசிச்சு, கடைசியில பொங்கல் வடை, மசால் தோசைன்னே காலம் போய்கிட்டு இருந்துச்சு.

அப்பதான், திடிர்னு ஒரு ஞானோதயம் வந்துச்சு. எதுக்குடா இப்படி லாட்ஜில தங்கிக்கிட்டு, ஓட்டலுக்கும் தண்டம் அழுது லாட்ஜுக்கும் தண்டம் அழுது, நாளக் கடத்திக்கிட்டு இருக்கிறதுக்கு, ஒரு வீடு பார்த்து, சமைச்சு சாப்பிட ஆரம்பிக்கலாம்னு திட்டம் போட்டோம்.

வீடு பார்க்கிறது அவ்வளவு சுலபமில்லையே. பேச்சிலர்-னா எவன் வீடு கொடுப்பான்கிற கதையாப் போயிடுச்சு. தேடு தேடுன்னு தேட ஆரம்பிச்சோம்.

நம்ம ரூம் மேட்டு, ரொம்ப டென்சனாயிட்டாரு. அவருக்கு எதுவுமே எடுத்தவுடனே நடக்கணும், இவ்வளவு இழுஇழுத்துதா..மனுசன் கோவமாயிட்டாரு..

'அட சாப்பாட்டு ராமா... உன் வயிறுக்காக இவ்வளவு கஷ்டப்பட முடியாதுடா'ன்னுட்டு இழுக்க ஆரம்பிச்சார்.

சரிடா மச்சி.. இன்னும் ஒரு வாரம் பார்க்கலாம், அதுக்குள்ள கிடைக்கலேன்னா, ஐடியாவ டிராப் பண்ணிரலாம்னு முடிவெடுத்தோம்.

வீடு கிடைச்சுதா... கொஞ்சம் வெயிட் செய்யண்டி..அடுத்தப் பதிவுக்கு!

4 comments:

')) said...

தம்பி கடோத்து !வீடு கெடச்சப்புறம் அக்காகிட்ட சொல்லு நெறைய ரெசிப்பி [பேச்சிலர்ஸ் ரெசிப்பி] சொல்லுதேன்.

')) said...

சூப்பர் அக்கா, அதுக்குள்ளே வந்து பின்னூட்டம் போட்டுட்டீகளே!

உங்க கையால முத குட்டு வாங்கியாச்சு, பார்க்கலாம், எப்படி சமையல் வருதுன்னு :))

')) said...

ஹஹ்ஹஹஹா! ஆஹஹ்ஹஹஹா!!
குயிக் ரெசிப்பிஸ் நிறைய தருகிறேன்
சென்று செய்து..தின்று பார்த்து..வென்று வாருங்கள்!!
வாழ்த்துக்கள்!

')) said...

நன்றி நானானி...

இதுவே எனக்கு போதும்! ஹாஹ்ஹாஹ்கஹாஹா... :))